​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக்கூறி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட நபர் கைது

Published : Oct 05, 2022 7:19 PM

பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக்கூறி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட நபர் கைது

Oct 05, 2022 7:19 PM

பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக்கூறி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட நபரை விழுப்புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வளவனூரை சேர்ந்த பிரகாஷ், 75-வது சுதந்திர தினத்தன்று, பாகிஸ்தான் வாழ்க எனவும், முடிந்தால் தன்னை கைது செய்யுமாறு காவல்துறைக்கு சவால் விடுக்கும் தொணியில் பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அவரை போலீசார் கைது செய்தனர். இவர் சில தினங்களுக்கு முன், விழுப்புரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ., லட்சுமணன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் வளவனூர், விழுப்புரம் நகர பகுதிகளில் உள்ள அரசு கட்டிடங்கள் சுவர்களில் பேனர்கள், சாலையை ஆக்கிரமித்து பேனர்கள் வைத்திருந்தனர்.

பேனரை அகற்றகோரி விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதாவுக்கு புகார் அளித்திருந்தார்.அந்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்காததால், தலையில்லா பொம்மைக்கு வயல் வெளியில் வைத்து நூதன முறையில் தனது புகார் மீது, எஸ்.பி., நடவடிக்கை எடுக்காததால் முண்டமே நீயாவது நடவடிக்கை எடு என நான்கு சாட்டை அடி கொடுத்து, முறையீடு செய்து வீடியோவாக பதிவிட்டு, சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.