​​ இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி....
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி....

இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி....

Jul 07, 2018 11:28 AM

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து  அணி வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தின் கார்டிஃப் (Cardiff) நகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

விராட் கோலி- சுரேஷ் ரெய்னா ஜோடி நிதானமாக விளையாடி ரன்களைச் சேர்த்தது. ரெய்னா 27 ரன்களும், கோலி 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

20 ஓவர்களில் இந்திய அணியால் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தோனி 32 ரன்களுடனும், பாண்டியா 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ  (Jonny Bairstow) 28 ரன்கள் எடுத்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் 58 ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 

இரண்டு பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்து இங்கிலாந்துஅணி வெற்றி பெற்றது. முதலாவது டி20 போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றியை தனதாக்கியுள்ளது.