​​ நெல்லுக்கான ஆதாரவிலையை உயர்த்த மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல்லுக்கான ஆதாரவிலையை உயர்த்த மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


நெல்லுக்கான ஆதாரவிலையை உயர்த்த மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Jul 06, 2018 6:16 PM

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலையை குவிண்டாலுக்கு 2310 ரூபாயாக உயர்த்த மத்திய அரசை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

4 ஆண்டுகளாக குவிண்டாலுக்கு ஆண்டுக்கு 50 முதல் 80 ரூபாய் மட்டுமே பெயரளவுக்கு உயர்த்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர்,  தற்போது நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலில் குவிண்டாலுக்கு 200 ரூபாய் அதிகரித்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, குவிண்டாலுக்கு 200 ரூபாய் வீதம் உயர்த்தியிருந்தால் தற்போது குவிண்டாலுக்கு 1750 ரூபாய்க்குப் பதில் 2310 ரூபாய் கிடைத்திருக்கும் என்றும், விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்திருந்தாலும், அவர்களின் வாழ்வாதாரம் வளம்பெறத் தொடங்கியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.