கேரள மாநிலம் பாலக்காடு அருகே கோவை பொறியியல் கல்லூரி பேருந்தை வழிமறித்த ஒரு கும்பல், மாணவர்கள் சிலரை சரமாரியாக தாக்கிய காட்சிகள் பேருந்தில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
கோவையில் தமிழக - கேரள எல்லையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் ஒரு தரப்பு மாணவர்கள் புதுசேரி வழியாக வீடு திரும்பிய போது, எதிர்தரப்பு மாணவர்களின் தூண்டுதலின் பேரில் கல்லூரி பேருந்தை வழிமறித்த கும்பல், பேருந்தில் ஏறி மாணவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் கா யமடைந்த மாணவர்கள் புகாரளிக்க முன்வராத நிலையில், சிசிடிவி பதிவுகளைக் கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.