​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுங்கக்கட்டண வசூல் ஒருபோதும் நிறுத்தப்படாது - அமைச்சர் நிதின் கட்கரி

Published : Jul 04, 2018 1:53 AM



சுங்கக்கட்டண வசூல் ஒருபோதும் நிறுத்தப்படாது - அமைச்சர் நிதின் கட்கரி

Jul 04, 2018 1:53 AM

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டண வசூல் ஒருபோதும் நிறுத்தப்படாது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் மராட்டிய நவ நிர்மாண் சேனா கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சுங்கக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டே தீரும் என உறுதிபட கூறினார்.

நல்ல சேவைகளை விரும்பினால், அதற்கான தொகையை செலுத்திதான் ஆக வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதே மத்திய சாலைபோக்குவரத்து துறையின் நோக்கம் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.