​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவை வந்த ஏர் அரேபிய விமானத்தில் வந்த பயணியிடம் தங்கக் கட்டிகள் பறிமுதல்

Published : Jul 04, 2018 12:14 AM

கோவை வந்த ஏர் அரேபிய விமானத்தில் வந்த பயணியிடம் தங்கக் கட்டிகள் பறிமுதல்

Jul 04, 2018 12:14 AM

கோவை விமானநிலையத்தில் கேரளாவைச் சேர்ந்த பயணியிடம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சார்ஜாவிலிருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த அமல்ராஜ் என்ற பயணியின் உடமைகளை சோதனையிட்டபோது, அதில் 3.67 கிலோ எடை கொண்ட 24 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து அமல்ராஜ் கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட தங்கத்தின் மதிப்பு ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.