​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவலரை தாக்கிய ரவுடிகளை ஏற்கனவே கைது செய்ய அறிவுறுத்தியும் அலட்சியம் செய்த போலீஸ்

Published : Jul 03, 2018 11:36 PM



காவலரை தாக்கிய ரவுடிகளை ஏற்கனவே கைது செய்ய அறிவுறுத்தியும் அலட்சியம் செய்த போலீஸ்

Jul 03, 2018 11:36 PM

சென்னை ராயப்பேட்டையில் காவலரை அரிவாளால் வெட்டி தாக்குதலில் ஈடுபட்ட ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க, ஏற்கனவே அறிக்கை அனுப்பி எச்சரிக்கப்பட்டும், ராயப்பேட்டை போலீசார் அதை அலட்சியப் படுத்தியிருந்தது அம்பலமாகியுள்ளது.

image

இந்த அறிக்கை காவல் ஆணையர் அலுவலத்தில் இருந்து கடந்த மாதம் 19-ந் தேதி மயிலாப்பூர் காவல் துணை ஆணையர், ராயப்பேட்டை சரக உதவி ஆணையர் மற்றும் நிலைய போலீசாருக்கு அனுப்பப் பட்டது. நடேசன் சாலை, பி.எம் தர்கா பகுதியில் ரவுடி அருண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இரவு 11 மணியிலிருந்து அதிகாலை வரை பொதுமக்களிடம் வழிப்பறி செய்வதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

image

இந்த அறிக்கை, ராயப்பேட்டை காவல் நிலைய அதிகாரிகளுக்கும், மயிலாப்பூர் துணை ஆணையருக்கும் அனுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய அறிவுறுத்தப்பட்டது.

image

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 2 வாரங்கள் கடந்து விட்டன. இந்நிலையில், எந்த ரவுடி கும்பல் தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டதோ, அதே கும்பல், வழிப்பறியை தடுக்க சென்ற காவலர் ராஜவேலுவை கொடூரமாக தாக்கி அட்டூழியம் செய்துள்ளது.

image

திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு, வி.எம். தர்கா பகுதியில் போதையில் ரவுடி கும்பலொன்று பெண்களை கேலி செய்வதாகவும், வழிபறியில் ஈடுபடுவதாகவும் காவல் கட்டுபாட்டு அறைக்கு தகவல் வந்தது.

image

இதையடுத்து ராயப்பேட்டை காவல் நிலைய முதல் நிலை காவலர் ராஜவேல் தனது இருச் சக்கர வாகனத்தில் சம்பவ எடுத்துக்கு சென்றுள்ளார். போதையில் இருந்த ரவுடி கும்பலை அங்கிருந்து செல்லுமாறு காவலர் ராஜ்வேல் எச்சரித்துள்ளார். காவலரை ஒருமையில் பேசிய ரவுடிகள் திடீரென தாக்க ஆரம்பித்தனர். அவர் தற்காத்து கொள்ள முயன்ற போது அரிவாள், கத்தியால் ஓட ஓட தாக்கினர்.

image

தனியாக சிக்கிக் கொண்ட ராஜவேல் ரத்தம் சொட்ட சொட்ட சுமார் ஒரு கிமீ தூரம் ஓடி வந்து காவல் நிலையத்திற்கு வந்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து காவல் ஆணையரும், உயர் அதிகாரிகளும் நேரில் வந்து விசாரித்து காவலருக்கு உயர் சிகிச்கைக்கு வேறு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டனர்.

image

இதனிடையே காவலரை தாக்கிய ரவுடிகள் அரவிந்தன், அருண், ஆனந்தன் , ஸ்ரீதர், கார்த்திக், ஜிந்தா ஆகியோரை கைது செய்து தலைமறைவான ரவுடிகளை தேடி வருகின்றனர்.

image

2 வாரங்களுக்கு முன்பே உத்தரவிட்டும், ரவுடிகளை கைது செய்யாமல் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டில் ராயப்பேட்டை காவல் நிலைய உதவி ஆணையரும், சட்டம் ஒழுங்கு ஆய்வாளரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.