​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜூலை 27-ல், இந்த நூற்றாண்டின் அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணம்..!

Published : Jul 03, 2018 11:05 PM



ஜூலை 27-ல், இந்த நூற்றாண்டின் அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணம்..!

Jul 03, 2018 11:05 PM

ஜூலை 27ஆம் தேதி வரும் முழுச் சந்திர கிரகணம் இந்த நூற்றாண்டிலேயே அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணமாகும் எனக் கொல்கத்தா பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 27ஆம் தேதி பவுர்ணமி நாளின் இரவில் முழுச் சந்திர கிரகணம் வருகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் தெரியும் இந்தக் கிரகணம் இருபத்தோராம் நூற்றாண்டிலேயே அதிக நேரம் நீடிக்கும் சந்திர கிரகணம் எனக் கொல்கத்தா பிர்லா கோளரங்கத்தின் இயக்குநர் தேவிப்பிரசாத் துவாரி தெரிவித்துள்ளார்.

கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜூலை 27 இரவு 11:54மணிக்குக் கிரகணம் தொடங்குகிறது. ஒரு மணி வாக்கில் முழுக் கிரகண நிலையை அடைந்து 1:52மணிக்கு நிலவு முழுவதும் மறைக்கப்பட்டுக் காரிருளாகத் தோன்றும். முழுக் கிரகணம் 2:43மணி வரை நீடிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக விலகி 3:49மணிக்குக் கிரகணம் முடிந்துவிடும்.