​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இரட்டை இருப்பிட சான்று பெற்று படிக்கும் மாணவர்கள் குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

Published : Jul 03, 2018 10:54 PM



இரட்டை இருப்பிட சான்று பெற்று படிக்கும் மாணவர்கள் குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

Jul 03, 2018 10:54 PM

இரட்டை இருப்பிட சான்று பெற்று தமிழக மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அபோது இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று மருத்துவ கல்லூரிகளில் மற்ற மாநில மாணவர்கள் சேருவதால் தமிழக மாணவர்களின் வாய்ப்பு பறிபோவதாக அவர் தெரிவித்தார்.

நீட் விவகாரத்தில் ஆட்சேபம் தெரிவிக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் 10 ஏழை குழந்தைகளின் கல்லூரி படிப்பு செலவுகளை ஏன் ஏற்க கூடாது எனவும் கேள்வி எழுப்பினார். இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்று தமிழக மருத்துவ கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் குறித்து ஜூலை 8ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.