​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஸ்வரூபம் படப்பாடலைப் பாடிச் சமூக வலைத்தளத்தில் புகழ்பெற்ற ராகேஷ் கமல்ஹாசனுடன் சந்திப்பு

Published : Jul 03, 2018 10:45 PM



விஸ்வரூபம் படப்பாடலைப் பாடிச் சமூக வலைத்தளத்தில் புகழ்பெற்ற ராகேஷ் கமல்ஹாசனுடன் சந்திப்பு

Jul 03, 2018 10:45 PM

விஸ்வருபம் படப் பாடலைப் பாடிச் சமூக வலைத்தளத்தில் புகழ்பெற்ற கேரளத் தோட்டத் தொழிலாளர் ராகேஷ் சென்னையில் நடிகர் கமல்ஹாசனைச் சந்தித்துப் பேசினார்.

கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தில் உன்னைக் காணாமல் எனத் தொடங்கும் ஒரு பாடல் உள்ளது. கேரளத்தைச் சேர்ந்த ரப்பர் தோட்டத் தொழிலாளி ராகேஷ் இந்தப் பாடலைப் பாடிய காணொலி சமூக வலைத்தளத்தில் பரவிப் புகழ்பெற்றது. இந்நிலையில் சென்னைக்கு வந்த ராகேஷ் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டில் அவரைச் சந்தித்தார்.

image

உலகிலேயே மிகச் சிறிய செயற்கைக் கோளைத் தயாரித்த இந்துஸ்தான் கல்லூரி மாணவர்களும் கமலஹாசனைச் சந்தித்துப் பேசினர்.