​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தார் சாலைகளை விட பிளாஸ்டிக் சாலைகள் வலிமையானது -பிரிட்டன் பொறியாளர் உறுதி

Published : Jul 03, 2018 10:22 PM



தார் சாலைகளை விட பிளாஸ்டிக் சாலைகள் வலிமையானது -பிரிட்டன் பொறியாளர் உறுதி

Jul 03, 2018 10:22 PM

தார் சாலைகளைக் காட்டிலும் பிளாஸ்டிக் கழிவுகளால் போடப்படும் சாலைகள் வலிமையானது என பிரிட்டனைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மெக்கார்ட்னே என்பவர் ((mccartney)) தாருடன் பிளாஸ்டிக் கழிவுகளை கலந்து வலிமையான கலவையை தயாரிப்பதுடன், பிளாஸ்டிக் சாலைக்கு தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்.

பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பதை தடுக்கும் வகையிலும், சாலையின் தரத்தை மேம்படுத்தும் வகையிலும் இந்தப் பணியை தொடங்கியதாக அவர் கூறியுள்ளார். ஒருமுறை இந்தியா வந்த போது குண்டும், குழியுமாக இருந்த சாலைகள் பிளாஸ்டிக் கழிவுகளால் மூடப்பட்டு சரிசெய்யப்பட்டு இருந்ததைக் கண்ட பின்னர் இந்த எண்ணம் தோன்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.