​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
MLA-க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் 3வது நீதிபதி முன்பு விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்

Published : Jul 03, 2018 9:46 PM



MLA-க்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் 3வது நீதிபதி முன்பு விசாரணைக்கு வர உள்ளதாக தகவல்

Jul 03, 2018 9:46 PM

தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அமர்வு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது.

இந்நிலையில் 3-வது நீதிபதி விமலா வழக்கை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தும், வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் 3-வது நீதிபதி சத்தியநாராயணா விசாரிப்பார் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் தலைமைப் பதிவாளரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நாளை வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.