​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனால் தினம் தினம் கஷ்டம் - தனபால்

Published : Jul 03, 2018 9:46 PM



திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனால் தினம் தினம் கஷ்டம் - தனபால்

Jul 03, 2018 9:46 PM

திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனை அவையில் வைத்துக்கொண்டு தாம் தினம் தினம் கஷ்டப்படுவதாக சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது, பாய்ண்ட் ஆப் ஆர்டர் விதிப்படி தனக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கோரினார். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததால், அன்பழகன் தொடர்ந்து அனுமதி கேட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது பேசிய சபாநாயகர், அன்பழகன் ஏதாவது ஒரு நாள் அனுமதி கேட்டால் கொடுக்கலாம், ஆனால் தினமும் இது போன்று அனுமதி கேட்டால் எப்படி தருவது என்று கேட்டார். தினமும் அன்பழகன் அவைக்கு தாமதமாக வருவதுடன், வந்தவுடன் பேசுவதற்கு அனுமதி கோருவதாகவும், அனுமதி அளிக்கவில்லை என்றால் வெளியில் சென்றுவிடுவதாகவும் தெரிவித்தார்.

ஜெ.அன்பழகனை அவையில் வைத்துக்கொண்டு தாம் மிகவும் கஷ்டப்படுவதாக கூறிய சபாநாயகர், பின்னர் நிபந்தனைகளுடன் அவரை பேச அழைத்தார்.