​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மணமக்கள் ஒய்யாரமாக பயணிக்கும் வகையில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வடிவமைப்பு

Published : Jul 03, 2018 9:37 PM



மணமக்கள் ஒய்யாரமாக பயணிக்கும் வகையில் ரோல்ஸ் ராய்ஸ் கார் வடிவமைப்பு

Jul 03, 2018 9:37 PM

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் திருமண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஒருவர், திருமண ஊர்வலத்தில் மணமக்கள் பயணிக்கும் வகையில் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை வடிவமைத்து இருப்பது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

image

போபாலில் திருமணத்துக்கு தேவையான மண்டபம், வாகனம், இசைக்கச்சேரி மற்றும் உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்து தரும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஹமீத் கான் என்பவர், தனது ரோல்ஸ் ராய்ஸ் காரை, மணமக்கள் ஒய்யாரமாக அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைத்துள்ளார்.

அந்த காருக்கு ராயல்ஸ் வெட்டிங் கார் என பெயர் சூட்டியுள்ள அவர், நடுத்தர மக்களும் செல்வந்தர்கள் போல் உணருவதற்காக, இந்த ஏற்பாட்டை செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்