​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் 2 டன் அளவில் புகையிலை, குட்கா பொருட்கள் பறிமுதல்

Published : Jul 02, 2018 11:03 PM

கோவையில் 2 டன் அளவில் புகையிலை, குட்கா பொருட்கள் பறிமுதல்

Jul 02, 2018 11:03 PM

கோவை காந்தி பூங்கா அருகே ஒரு வீட்டில் இருந்து 2 டன் அளவிலான குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொன்னையராஜபுரம் கிருஷ்ணா நகர் பகுதியில் ஒரு வீட்டில் பான் மசாலா மற்றும் குட்கா, புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக உணவுப்பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று சோதனை நடத்திய அதிகாரிகள், 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலை, குட்கா பொருட்களை மூட்டை மூட்டையாக கைப்பற்றினர்.

விசாரணையில் ஷர்வான்குமார் என்ற வடமாநில வாலிபர் தனக்கு சொந்தமான வீடு எனக் கூறியுள்ளார். எனினும் அவர் மீது சந்தேகமடைந்துள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.