​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வசூலில் புதிய சாதனை படைக்கும் "சஞ்சு" திரைப்படம்

Published : Jul 02, 2018 10:50 PM

வசூலில் புதிய சாதனை படைக்கும் "சஞ்சு" திரைப்படம்

Jul 02, 2018 10:50 PM

ரன்பீர் கபூர் நடித்துள்ள சஞ்சு திரைப்படம், பாகுபலி இரண்டாம் பாகத்தின் வசூல் சாதனையை தகர்த்தது.

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். வெள்ளிக்கிழமை வெளியான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பத்மாவத், ரேஸ் 3 ஆகிய படங்கள் ஒரு வாரத்தில் ஈட்டிய வசூலைக் காட்டிலும், வெறும் 3 நாட்களில் 120 கோடி ரூபாய் வசூலித்து சஞ்சு சாதனை படைத்துள்ளது. பாகுபலி இரண்டாம் பாகத்தின் இந்தி பதிப்பின் ஒருநாள் வசூல் சாதனையையும் முறியடித்தது. நேற்று ஒருநாளில் சஞ்சு 46 கோடியே 71 லட்சம் வசூலித்ததன் மூலம், இந்தியில் ஒரு நாளில் அதிக வசூல் புரிந்த பாகுபலி இரண்டாம் பாகத்தின் சாதனையை தகர்த்தது.