​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
GST-க்கு பின் கோவை மண்டல வரி வருவாய் 18 விழுக்காடு அதிகரித்து உள்ளதாக கோவை GST ஆணையார் தகவல்

Published : Jul 02, 2018 12:47 PM

GST-க்கு பின் கோவை மண்டல வரி வருவாய் 18 விழுக்காடு அதிகரித்து உள்ளதாக கோவை GST ஆணையார் தகவல்

Jul 02, 2018 12:47 PM

ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு பிறகு கோயம்புத்தூர் மண்டலத்தில் 18 விழுக்காடு வரி வருவாய் அதிகரித்து உள்ளதாக, கோவை ஜிஎஸ்டி ஆணையார் ஸ்ரீனிவாச ராவ் தெரிவித்துள்ளார்..

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு ஆனதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிறு குறு தொழில் துறையினருக்கு ஜி எஸ் டி குறித்த சட்டங்களை பின்பற்றுவதில் சிக்கல்கள் இருந்துவருவதாகவும், இருப்பினும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.