​​ தரமான சேவை வழங்க தவறியதாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டிராய் அபராதம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தரமான சேவை வழங்க தவறியதாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டிராய் அபராதம்

Published : Jul 02, 2018 1:05 AM

தரமான சேவை வழங்க தவறியதாக ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டிராய் அபராதம்

Jul 02, 2018 1:05 AM

வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவை வழங்க தவறியதாக கூறி, ஜியோ, ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை அமைப்பான டிராய் அபராதம் விதித்துள்ளது.

மற்ற நிறுவங்களின் மொபைல் நெட்வோர்க்கை பயன்படுத்த முடியாதது, அழைப்பின் போது இடையிலேயே இணைப்பு துண்டிக்கப்படுவது, வாடிக்கையாளர் சேவை குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த மூன்றாவது காலாண்டில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு 31 லட்சம் ரூபாயை டிராய் அபராதமாக விதித்துள்ளது. அதே போன்று வோடபோன் நிறுவனத்திற்கு 9 லட்சம் ரூபாயும், எர்டெல் நிறுவனத்திற்கு 23 லட்சம் ரூபாயும், ஐடியா நிறுவனத்திற்கு 29 லட்சம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது