​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பைக் பந்தயம்

Published : Jul 01, 2018 9:48 PM



கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான பைக் பந்தயம்

Jul 01, 2018 9:48 PM

கோவை: கோவையில் நடைபெற்ற தேசிய அளவிலான பைக் ரேஸ் போட்டிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

19வது தேசிய அளவிலான MRF பைக் பந்தயத்தின் 3 வது சூப்பர் கிராஸ் பைக் சேம்பியன்ஷிப் போட்டிகள் கோவை கொடீசியா மைதானத்தில் நடைபெற்றது. 9 பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 120 வீரர்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் கலந்து கொண்டனர். போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

image

ஒரு பிரிவுக்கு மூன்று பேர் வீதம் 9 பிரிவுகளில் இருந்து முதல் மூன்று இடங்களை பிடிக்கும் 27 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு செப்டம்பர் 9ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் நான்காம் சுற்று போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர்.