​​ துபாயில் நடந்த கபடி மாஸ்டர்ஸ் போட்டியில் இந்திய அணி சாம்பியன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துபாயில் நடந்த கபடி மாஸ்டர்ஸ் போட்டியில் இந்திய அணி சாம்பியன்

Published : Jul 01, 2018 12:03 PM

துபாயில் நடந்த கபடி மாஸ்டர்ஸ் போட்டியில் இந்திய அணி சாம்பியன்

Jul 01, 2018 12:03 PM

துபாயில் நடைபெற்ற கபடி மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா 44க்கு 26 என்ற புள்ளிக்கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

image

இந்தியா, பாகிஸ்தான், ஈரான், தென்கொரியா, அர்ஜெண்டினா, கென்யா ஆகிய ஆறு அணிகள் கலந்து கொண்ட கபடி மாஸ்டர்ஸ் தொடர் துபாயில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, ஈரான் அணிகள் பலப்பரீட்சை செய்தன. தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் இந்திய அணி 18-11 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதிநேர ஆட்டத்தில் இந்தியா 26 புள்ளிகளும், ஈரான் 15 புள்ளிகளும் எடுத்தன. இறுதியில் இந்தியா 44-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.