​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்

Published : Mar 05, 2018 9:05 PM



மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்

Mar 05, 2018 9:05 PM

நித்யானந்தா மதுரை ஆதீன மடத்திற்குள் நுழையவும், மடத்திற்கு சொந்தமான கோவில்களுக்குள் செல்லவும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி ஆர்.மகாதேவன்  தீர்ப்பளித்தார். நித்யானந்தா மதுரை ஆதீன மடத்திற்குள் நுழையவும், மடத்துக்கு சொந்தமான கோவில்களுக்கு செல்லவும் தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, மீறி நித்யானந்தா சென்றால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

முறைகேடுகளில் ஈடுபடும் ஆதீனங்கள், மடாதிபதிகளுக்கு எதிராக இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் தொடர்புடைய சொத்துக்கள், கோவில்களை கையகப்படுத்தி, பூஜை உள்ளிட்ட நித்திய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் நீதிபதி உத்தரவிட்டார். தமிழகம் முழுவதும் உள்ள ஆதீனங்கள் மீதான புகார்கள், அவர்களின் சொத்துக்கள் உருவான விதம் உள்ளிட்டவை குறித்து இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி மகாதேவன், அடுத்தகட்ட விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.