​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குட்கா வழக்கில் மீண்டும் சிக்கிய நபர் வாகன சோதனையின்போது போலீசாரை மிரட்டியதாக கைது

Published : Jun 29, 2018 9:28 PM

குட்கா வழக்கில் மீண்டும் சிக்கிய நபர் வாகன சோதனையின்போது போலீசாரை மிரட்டியதாக கைது

Jun 29, 2018 9:28 PM

திருவள்ளூரில் குட்கா வழக்கில் சிக்கிய நபர் மீண்டும் குட்கா பொருட்கள் கடத்திய நிலையில், வாகன சோதனையின்போது போலீசாரை மிரட்டியதாக கைது செய்யப்பட்டான்.

கடந்த இரு தினங்களுக்கு முன் தலக்காஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு குடோனில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், லக்காராம் என்பவன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஈக்காடு பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் லக்காராம் மீண்டும் குட்கா பொருட்களை கடத்தி வந்ததாகவும் பஜார் வீதியில் வாகன சோதனையில் போலீசாரிடம் சிக்கியபோது, கத்தியைக் காட்டி அவர்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து லக்காராமை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.