​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் மாற்றப்பட்ட 20 இரு சக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்...!

Published : Jun 29, 2018 9:21 PM



அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்கள் மாற்றப்பட்ட 20 இரு சக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்...!

Jun 29, 2018 9:21 PM

சென்னையில் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பொறுத்தி போக்குவரத்து விதிகளை மீறியதாக 20 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இரு சக்கர வாகனங்களில் அந்த நிறுவனம் பொருத்தியிருந்த சைலன்சர்களை அகற்றிவிட்டு அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்களை பொருத்திக்கொண்டு அதிவேகத்துடன் இளைஞர்கள் செல்வது அதிகரித்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சம் அடைவதுடன், விபத்துக்களும் நேரிடுகிறது.   

புதன்கிழமை இரவு நுங்கம்பாக்கம் கல்லூரி சலையில், காரில் அதிக இரைச்சல் எழுப்பியபடி சென்ற நடிகர் ஜெய்யை போக்குவரத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் தாம்பரம் - மதுரவாயல் சாலை போரூர் சுங்கச்சாவடியில் கோயம்பேடு போக்குவரத்து போலீசார் இன்று வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சர்கள் பொறுத்தப்பட்ட 20 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இத்தகைய சைலன்சர்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் மெக்கானிக்குகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கையும் தீவிரப்படுத்தி வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.