​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டாஸ்மாக் வாகனத்துக்கு தீவைக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு முன்ஜாமீன்

Published : Jun 29, 2018 9:20 PM



டாஸ்மாக் வாகனத்துக்கு தீவைக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு முன்ஜாமீன்

Jun 29, 2018 9:20 PM

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அருகே டாஸ்மாக் மதுபான வாகனத்துக்கு தீவைத்த வழக்கில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் ஒன்றாம் தேதி எரியோடு அருகே நெடுஞ்சாலையில் டாஸ்மாக் மதுபானத்தை ஏற்றிச் சென்ற வாகனத்துக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். அதில் 7 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவம் தொடர்பாக வடமதுரை காவல்துறையினர் வேல்முருகன் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் சம்பவம் நடந்த அன்று தாம் வேறு ஒரு வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் தமக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று கூறி முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவத்தில் வேல்முருகனுக்கு சம்பந்தம் உண்டு என்று சொல்வதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறி முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.