​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காவிரி விவகாரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Published : Jun 29, 2018 9:13 PM

சென்னையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காவிரி விவகாரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Jun 29, 2018 9:13 PM

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் வலியுறுத்தப்பட வேண்டிய அம்சங்கள் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், எத்தகைய வாதங்களை எடுத்து வைப்பது என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி. அன்பழகன் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் படி, தமிழகத்திற்கு சேர வேண்டிய 177.25 டிஎம்சி அளவு தண்ணீர் வழங்கப்படுவதை உறுதி செய்வது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

மேலும்,  எவ்வெப்போது, எந்த அளவில் தண்ணீரை வழங்க வேண்டும் என்பதை காவிரி மேலாண்மை ஆணையம் வரையறுக்கச் செய்வது குறித்தும் ஆலோசிக்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.