​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காரணம் இன்றி கல்விக்கடனை நிராகரித்த இந்தியன் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Published : Jun 29, 2018 9:09 PM

காரணம் இன்றி கல்விக்கடனை நிராகரித்த இந்தியன் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Jun 29, 2018 9:09 PM

போதிய காரணம் இன்றி கல்விக்கடனை நிராகரித்த இந்தியன் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆரணியைச் சேர்ந்த நவீன் என்ற மாணவன் தாக்கல் செய்த மனுவில், 2015 ஆம் ஆண்டு ப்ளஸ் 2 தேர்வில் 1,017 மதிப்பெண் பெற்று, சென்னை சாய்ராம் சித்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக கூறியிருந்தார். 2016-ஆம் ஆண்டு ஆரணியில் உள்ள இந்தியன் வங்கியில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்ததாகவும், அந்த மனு நிராகரிக்கப்பட்டதாகவும் மனுவில் கூறியிருந்தார்.

வேண்டுமென்றே கல்விக்கடன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும், தனக்கு கல்விக்கடன் வழங்க ஆணையிடுமாறும் அதில் கோரியிருந்தார். வழக்கு நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ப்ளேஸ்மெண்ட் ரெக்கார்டு இல்லை என்பது போன்ற மிக சிறிய காரணங்களுக்காக கல்விக்கடனை மறுக்கக் கூடாது என நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

கல்விக்கடன் வழங்கும் விதிகளை அதிகாரிகள் முறையாக கடைபிடிக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் மாணவனின் கடன் கோரும் விண்ணப்பத்தை பரிசீலிக்க வங்கிக்கு அவர் ஆணையிட்டார்.