​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தென்கொரிய தலைநகர் சியோலில் இருந்த அமெரிக்க ராணுவ படைப் பிரிவு இடமாற்றம்

Published : Jun 29, 2018 8:50 PM



தென்கொரிய தலைநகர் சியோலில் இருந்த அமெரிக்க ராணுவ படைப் பிரிவு இடமாற்றம்

Jun 29, 2018 8:50 PM

தென்கொரிய தலைநகர் சியோலில் இருந்த அமெரிக்க ராணுவ படைப் பிரிவு, 70 ஆண்டுகளுக்குப் பிறகு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், 1945ஆம் ஆண்டில் முதன் முதலில் கொரியாவுக்கு வந்த அமெரிக்க ராணுவம், அப்போதிலிருந்து சியோலில் படைப் பிரிவை பராமரித்து வருகிறது. அமெரிக்கா-தென்கொரியா இடையேயான கூட்டை உணர்த்தும் வகையிலும், வடகொரியா ஆக்கிரமிப்பு முயற்சிகளில் ஈடுபடாமல் தடுக்கும் வகையிலும், சியோலில் அமெரிக்க ராணுவப் படைப் பிரிவு தொடர்ந்து இருந்து வந்தது.

தென்கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவப் படைப் பிரிவின் தலைமையகமும் சியோலில் செயல்பட்டு வந்தது.  2008ஆம் ஆண்டிலிருந்தே சியோலில் இருந்து அமெரிக்க படைப் பிரிவு இடமாற்றம் செய்யப்படும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், பியாங்டாக் பகுதியில், கேம்ப் ஹம்ப்ரீஸ் ((Camp Humphreys)) என்ற இடத்திற்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.