​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரத்தம் சொட்டச் சொட்ட காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார்

Published : Jun 29, 2018 8:42 PM



ரத்தம் சொட்டச் சொட்ட காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து புகார்

Jun 29, 2018 8:42 PM

லண்டன் மாப்பிள்ளை எனக் கூறி உணவக அதிபரின் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்று கைதான நபரின் தந்தை தன்னை அடியாட்களுடன் வந்து தாக்கியதாக ஒருவர் ரத்தம் சொட்ட சொட்ட வந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை மண்ணடியைச் சேர்ந்த அமானுல்லாகான் என்பவர் தனது மகன் முகம்மது அஸ்லம் MBA முடித்து லண்டனில் வேலை பார்ப்பதாகக் கூறி, ராயபுரம் உணவக அதிபரான சையது இப்ராஹிமின் மகளை பெண் கேட்டார். இதையடுத்து பூ வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், பெண் வீட்டார், மணமகன் முகமது அஸ்லம் குறித்து விசாரித்த போது அவர் 10ஆம் வகுப்பு தோல்வியடைந்தவர் என்றும் லண்டனில் கூலி வேலை பார்த்ததும் தெரியவந்தது.

இதனால் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டாரை மணமகன் வீட்டார் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் மணமகன் முகமது அஸ்லமை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் முகமது அஸ்லமின் தந்தை அமானுல்லா அடியாட்களுடன் வந்து தன்னை தாக்கியதாக பெண்ணின் தந்தை சையது இப்ராஹிம் ரத்தம் சொட்டச் சொட்ட சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் அளித்தார்.