​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயில் ஒன்றில், கேட்டை வளைத்து 8 கிலோ வெள்ளி, 35 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

Published : Jun 29, 2018 8:16 PM

கோயில் ஒன்றில், கேட்டை வளைத்து 8 கிலோ வெள்ளி, 35 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

Jun 29, 2018 8:16 PM

கோவையில் கோயில் ஒன்றில், கேட்டை வளைத்து 8 கிலோ வெள்ளி, 35 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பாலவிநாயகர் கோயிலுக்கு இன்று அதிகாலை வழக்கம்போல நடை திறக்க வந்த பூசாரி, 2 கேட்டுகள் வளைந்த நிலையில் திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, 3 கிலோ வெள்ளி ஆபரணங்கள், 35 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.

தகவலின்பேரில் வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார், கொள்ளை நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். பூட்டை உடைக்காமல், கேட்டை வளைத்து கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.