​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Published : Jun 29, 2018 6:24 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு

Jun 29, 2018 6:24 PM

வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய மழைபெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன்கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணிநேரத்தில் அதிக அளவாக நீலகிரி மாவட்டம் தேவாலா, கோவை மாவட்டம் சின்ன கல்லாறு, வால்பாறை ஆகிய இடங்களில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தென்தமிழகக் கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்புடனும் கடலுக்குச் செல்லுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.