​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கி.மு., கி.பி., என்ற நடைமுறை தொடர்ந்து பயன்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Published : Jun 29, 2018 6:13 PM



கி.மு., கி.பி., என்ற நடைமுறை தொடர்ந்து பயன்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

Jun 29, 2018 6:13 PM

கி.மு., கி.பி., என்ற நடைமுறை தொடர்ந்து பயன்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

புதிய பாடப் புத்தகங்களில் கி.மு., கி.பி., என்பதற்கு பதிலாக பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்குப் பின் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது வரலாற்று பிழை ஆகிவிடும் என்று, அதிமுக எம்எல்ஏ இன்பதுரை மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸ் கூறினர்.

எனவே முன்னர் இருந்ததுபோல மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், கி.மு., கி.பி., என்ற நடைமுறை தொடரும் என தெரிவித்தார்.