​​ முடிவுக்கு வந்தது ஆப்பிள் - சாம்சங் காப்புரிமை பிரச்சனை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முடிவுக்கு வந்தது ஆப்பிள் - சாம்சங் காப்புரிமை பிரச்சனை

Published : Jun 29, 2018 12:32 PMமுடிவுக்கு வந்தது ஆப்பிள் - சாம்சங் காப்புரிமை பிரச்சனை

Jun 29, 2018 12:32 PM

காப்புரிமை பிரச்சனையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு இடையிலான 7 ஆண்டுகள் சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

ஐபோன் வடிவமைப்புகளை சாம்சங் நிறுவனம் காப்பியடித்ததாக, கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சாம்சங் நிறுவனம் 539 மில்லியன் டாலரை ஆப்பிள் நிறுவனத்திற்கு இழப்பீடாக வழங்க அமெரிக்காவின் சான் ஜோஸ் நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து சாம்சங் நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், காப்புரிமை விவகாரத்தை திரும்பப் பெறுவதாக இரு ஜாம்பவான்களும் அறிவித்துள்ளன. இந்த பிரச்சனையை தங்களுக்குள் தீர்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளன.