​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயம்புத்தூரில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தை யார் எதிர்த்தாலும், அது மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் - எஸ்.பி.வேலுமணி

Published : Jun 29, 2018 1:04 AM



கோயம்புத்தூரில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தை யார் எதிர்த்தாலும், அது மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் - எஸ்.பி.வேலுமணி

Jun 29, 2018 1:04 AM

கோயம்புத்தூரில், தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைப்பதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்தை யார் எதிர்த்தாலும், அது மக்களுக்கு செய்யும் துரோகமாகவே அமையும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்திருக்கிறார். 

சட்டப்பேரவையில், சிங்கநல்லூர் திமுக எம்எல்ஏ கார்த்திக், கொண்டுவந்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்தார். சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில், கோயம்புத்தூர் மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்க வகை செய்யும் திட்டத்தை, குன்றத்தூரில் இருந்துகொண்டு ஒருவர்,  எதுவும் தெரியாமல், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாக, தகவல்களை பரப்புவதாக தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்காலத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டாலும்,  அது நல்ல திட்டம் என்பதாலேயே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தனது ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்து, தொடங்கி வைத்ததாக, அமைச்சர் வேலுமணி கூறினார்.