​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் தடை செய்யப்பட்ட 1,350 கிலோ குட்கா பறிமுதல்

Published : Jun 28, 2018 10:03 PM

கோவையில் தடை செய்யப்பட்ட 1,350 கிலோ குட்கா பறிமுதல்

Jun 28, 2018 10:03 PM

கோவையில் தடை செய்யப்பட்ட ஆயிரத்து 350 கிலோ புகையிலைப் பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராஜவீதியில் உள்ள கடைகளில் அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சந்திரா டிரேடர்ஸ் என்ற கடையில் மட்டும் 750 கிலோ குட்கா கைப்பற்றப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை எங்கிருந்து கொண்டு வந்தார்கள், வினியோகம் செய்வதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.