​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிநீருக்கான கட்டணத்தை நிர்ணயிப்பது போன்ற பொறுப்புகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட மாட்டாது - எஸ்.பி.வேலுமணி

Published : Jun 28, 2018 7:11 PM

குடிநீருக்கான கட்டணத்தை நிர்ணயிப்பது போன்ற பொறுப்புகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட மாட்டாது - எஸ்.பி.வேலுமணி

Jun 28, 2018 7:11 PM

கோவை மாநகராட்சியில் குடிநீருக்கான கட்டணத்தை நிர்ணயிப்பது போன்ற பொறுப்புகள், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட மாட்டாது என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத்திற்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும், மேலும் தகுதியற்ற நிறுவனத்திடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டி, திமுக சார்பில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் வேலுமணி, கோவை மாநகராட்சியின் 24 மணி நேர குடிநீர் சேவைத் திட்டம் தகுதியுள்ள நிறுவனத்திடமே வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத் திட்டத்தின் பணிகள் இதே சூயஸ் நிறுவனத்திடம் தான் ஒப்படைக்கப்பட்டது எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குதல் மற்றும் பராமரிப்புப் பணியை சூயஸ் நிறுவனம் இன்றுவரை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குடிநீர் திட்டத்தை இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகளை மட்டுமே சூயஸ் நிறுவனம் மேற்கொள்ளும் என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கமளித்துள்ளார்.