​​ உதவி எண் 104-ல் மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்க ஏற்பாடு : விஜயபாஸ்கர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதவி எண் 104-ல் மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்க ஏற்பாடு : விஜயபாஸ்கர்

உதவி எண் 104-ல் மாணவர்களுக்கு மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்க ஏற்பாடு : விஜயபாஸ்கர்

Mar 05, 2018 3:05 AM

தேர்வு முடிவுகள் வெளியாகும்போது மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க சுகாதாரத்துறை உதவி எண்ணான 104-ல் தொடர்பு கொண்டால், மனநல மருத்துவர்கள் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறுவர்களின் பிறவிக்குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் 30 கோடி ரூபாய் செலவில் சிறப்பு மையம் தொடங்கப்பட இருப்பதாக கூறினார். மருத்துவ உயர்கல்வியில் ஓ.பி.சி. பிரிவுக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.