​​ சென்னையில் துப்பாக்கி முனையில் வியாபாரிகளை கடத்தி ரூ.16 லட்சம் வெளிநாட்டு பணம் வழிப்பறி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் துப்பாக்கி முனையில் வியாபாரிகளை கடத்தி ரூ.16 லட்சம் வெளிநாட்டு பணம் வழிப்பறி


சென்னையில் துப்பாக்கி முனையில் வியாபாரிகளை கடத்தி ரூ.16 லட்சம் வெளிநாட்டு பணம் வழிப்பறி

Mar 05, 2018 3:04 AM

சென்னையில் அதிகாரிகள் போல் நடித்து துணி வியாபாரிகளை துப்பாக்கி முனையில் காருடன் கடத்திச் சென்று 16 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலந்தூர் ரயில் நிலையம் அருகே நடந்த இந்த நூதன கொள்ளை சம்பவத்தில், இலங்கை செல்வதற்காக விமான நிலையத்திற்கு காரில் சென்ற 5 வியாபாரிகளை மடக்கியுள்ளனர். தங்களை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் என கூறிய கொள்ளையர்கள் அதே காரில் ஏறி 5 வியாபாரிகளையும் கடத்திச் சென்றுள்ளனர். வியாபாரிகளிடம் இருந்த 16 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தையும் துப்பாக்கியை காட்டி மிரட்டி பறித்துக் கொண்டு ஒவ்வொருவரையும் வெவ்வேறு பகுதியில் இறக்கிவிட்டு தப்பியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட துணி வியாபாரிகள் 5 பேரும் பரங்கிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்