​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
MLAக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க கோரிய மனு - நாளை மறுநாள் விசாரணை என தகவல்

Published : Jun 25, 2018 4:46 PM



MLAக்கள் தகுதி நீக்கத்திற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க கோரிய மனு - நாளை மறுநாள் விசாரணை என தகவல்

Jun 25, 2018 4:46 PM

எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்திற்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை  நாளை மறுநாள் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டப் பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அவர்கள் உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை கடந்த ஜூன் 14-ஆம் தேதி வழங்கியது. எனவே, இந்த வழக்கை விசாரிக்கும் 3-ஆவது நீதிபதியாக நீதிபதி எஸ்.விமலாவை நியமனம் செய்து, பதிவுத் துறைக்கு நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ் கடந்த ஜூன் 18-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏ.க்களில் தங்க.தமிழ்ச்செல்வன் தவிர்த்த 17 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மனுவில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வெளியாகாத நிலையில், உச்சநீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.