​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திரைப்பட காப்புரிமை மீறல்.. சுந்தர் பிச்சை மீது வழக்கு..!

Published : Jan 26, 2022 9:41 PM

திரைப்பட காப்புரிமை மீறல்.. சுந்தர் பிச்சை மீது வழக்கு..!

Jan 26, 2022 9:41 PM

திரைப்பட காப்புரிமை மீறல் தொடர்பான விவகாரத்தில் ஆல்பபெட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை மீது மகராஷ்டிரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பாலிவுட் இயக்குநரான சுனில் தர்ஷன் தயாரித்து, இயக்கி, 2017-ல் வெளியான Ek Haseena Thi Ek Deewana Tha என்ற படத்தை, உரிமம் இன்றி சட்டவிரோதமாக யூடியூப்பில் வெளியிட அனுமதித்ததாக அவர் நீதிமன்றத்தை நாடியிருந்தார்.

படத்தை யூடியூப்பில் வெளியிட்டோர் குறித்தும், கூகுள் நிறுவனத்திடமும் பல முறை புகாரளித்து நோட்டீஸ் அனுப்பியும் முறையாக பதில் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில்,சுந்தர் பிச்சை மீது வழக்குப்பதிவு செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது.