​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துப்பாக்கி குண்டு பாய்ந்து மேற்கூரை சேதமடைந்த வீட்டில் இருந்து மேலும் ஒரு துப்பாக்கி குண்டு கண்டெடுப்பு

Published : Jan 26, 2022 5:50 PM

துப்பாக்கி குண்டு பாய்ந்து மேற்கூரை சேதமடைந்த வீட்டில் இருந்து மேலும் ஒரு துப்பாக்கி குண்டு கண்டெடுப்பு

Jan 26, 2022 5:50 PM

பெரம்பலூரில் துப்பாக்கி குண்டு பாய்ந்து வீட்டின் மேற்கூரை சேதமடைந்த நிலையில், அதே வீட்டில் இருந்து மேலும் ஒரு துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மருதடி - ஈச்சங்காடு பகுதியில் சுப்பிரமணி என்ற விவசாயி வீட்டின் ஆஸ்பெட்டாஸ் மேற்கூரையை நேற்று துப்பாக்கி குண்டு துளைத்தது. அந்த கிராமத்தை ஒட்டிய மலைப்பகுதியில், துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வரும் நிலையில், அங்கிருந்து பயிற்சியின் போது தவறுதலாக குண்டு பறந்து வந்து மேற்கூரையில் துளைத்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

அந்த துப்பாக்கி குண்டை தடய அறிவியியல் ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதே வீட்டில் மேலும் ஒரு துப்பாக்கி குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று எடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டை விட இன்று கண்டெடுக்கப்பட்டது அளவில் சிறியதாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அதனை கைப்பற்றி போலீசாரும், வருவாய்த்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.