​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போதையில் நள்ளிரவில் சாலை நடுவே கேக் வெட்டி கொண்டாட்டம் ; தட்டிக் கேட்ட தந்தை, மகன் மீது தாக்குதல்

Published : Jan 26, 2022 5:44 PM

போதையில் நள்ளிரவில் சாலை நடுவே கேக் வெட்டி கொண்டாட்டம் ; தட்டிக் கேட்ட தந்தை, மகன் மீது தாக்குதல்

Jan 26, 2022 5:44 PM

சென்னை அயனாவரத்தில் நள்ளிரவில் சாலை நடுவே கேக் வெட்டி போதையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சிலர் அதனைத் தட்டிக் கேட்ட தந்தை - மகனைத் தாக்கியுள்ளனர்.

ஏகாங்கிபுரம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவன், பொண்ணுவேல்புரம் பகுதியில் நேற்று இரவு குடியிருப்புகளுக்கு எதிரே சாலையின் நடுவே 10-க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளான்.

சாலையின் நடுவிலேயே காரையும் நிறுத்தி கேக் வெட்டியதாகவும், மது பாட்டிலுடன் நின்று கொண்டு குடிபோதையில் கூச்சலிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தட்டிக்கேட்ட பெண் ஒருவரை ஆபாசமாகப் பேசிய அந்த கும்பல், அவருக்கு ஆதரவாகப் பேச வந்த அப்பெண்ணின் கணவர் சிவக்குமார் மற்றும் மகனையும் மது பாட்டிலால் தலையில் அடித்து, அருகிலிருந்த கழிவுநீர் தொட்டியில் இடித்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த சிவக்குமாருக்கு தலையில் 6 தையல் போடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.