​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
18 MLA.க்கள் வழக்கு.. தலைமை நீதிபதி விளக்கம்...

Published : Jun 23, 2018 9:37 PM



18 MLA.க்கள் வழக்கு.. தலைமை நீதிபதி விளக்கம்...

Jun 23, 2018 9:37 PM

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பால் விமர்சனத்துக்கு ஆளான நிலையில், வெளிமாநிலத்தை சேர்ந்த தனக்கு தமிழகம் தொடர்புடைய வழக்கில் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். 

நாமக்கல்லில் நடைபெற்ற கூடுதல் நீதிமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வழங்கியதால் விமர்சனத்திற்கு ஆளான விவகாரம் குறித்து பேசினார். வேறொரு மாநிலத்தை சேர்ந்த தமக்கு, தனிப்பட்ட நலன்கள் ஏதும் இருக்க முடியாது என்பதை சரியாக சிந்திக்கக்கூடியவர்கள் அறிவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காத மனுதாரர்கள் மற்றும் ஒரு சிலரின் விமர்சனத்தை தாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை என்றும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.