​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர் பகவான் காட்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் நெகிழ்ச்சி

Published : Jun 22, 2018 10:03 PM

அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர் பகவான் காட்சி குறித்து ஏ.ஆர்.ரஹ்மான், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்டோர் நெகிழ்ச்சி

Jun 22, 2018 10:03 PM

திருத்தணி அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் பணிமாறுதலில் செல்லக்கூடாது என்று மாணவர்கள் கதறி அழுத காட்சி குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியகரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியர் பகவான். மாணவர்களின் ஆங்கிலப் புலமையை வெளிக்கொணரும் விதமாக எளிமையாகவும், புரியும்படியும் பாடம் நடத்தியதால், அனைவருக்கும் பிரியமான ஆசிரியராக பகவான் திகழ்கிறார். இவர் பணியிட மாறுதல் பெற்று செல்லும் தகவல் அறிந்து மாணவ, மாணவிகள் கதறி அழுதனர்.  இத்தகைய ஆசிரியர் பகவானுக்கு திரைபிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

imageimage

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மான், ஆசிரியர்-மாணவர்கள் இருதரப்புக்குமே வாழ்த்துகள் என பொருள்படும்படி, குரு-சிஷ்யர்கள் எனக் குறிப்பிட்டு பூவின் படத்தையும் பதிவுசெய்துள்ளார். இதேபோல, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள பிணைப்பை பார்க்கும்போது நெஞ்சம் நெகிழ்ந்துபோவதாக ஹிருத்திக் ரோஷன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.