ரயில் நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட மாட்டாது என ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
மக்களவையில் கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த அவர், ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்காக, ரயில்வேக்கு சொந்தமான இடங்கள் தனியாருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் குத்தகைக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
குத்தகை உரிமம் முடிந்தவுடன் அந்த சொத்துக்கள் மீண்டும் ரயில்வேயிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என அவர் கூறினார். ரயில்களை தனியார் இயக்குவது பற்றிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்தியன் ரயில்வேயில் எந்த பயணியர் ரயிலும் தனியாரால் இயக்கப்படுவதில்லை என்றார்.