​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பச்சிளம் குழந்தையை ரூ.2.5 லட்சத்துக்கு விற்ற தாய்.. குழந்தையை வாங்கியவர்களே பணத்தை பறித்து சென்ற சம்பவம்

Published : Nov 28, 2021 6:49 PM

பச்சிளம் குழந்தையை ரூ.2.5 லட்சத்துக்கு விற்ற தாய்.. குழந்தையை வாங்கியவர்களே பணத்தை பறித்து சென்ற சம்பவம்

Nov 28, 2021 6:49 PM

சென்னையில், பிறந்து 5  நாட்களே ஆன குழந்தையை இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்ற தாயிடம் குழந்தையை வாங்கியவர்களே கொடுத்த பணத்தை பறித்துச் சென்ற  சம்பவம் நடந்துள்ளது.

புழல் காவாங்கரை பகுதியை சேர்ந்த கணவரை பிறிந்து வாழும் 28 வயது  யாஸ்மினுக்கு  கடந்த 21-ஆம் தேதி வண்ணாரப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

வறுமையில் வாழ்வதால் தனக்கு சமீபத்தில் பரிட்சயம் ஏற்பட்ட எண்ணூரைச் சேர்ந்த ஜெயகீதா ஏற்பாட்டின் மூலம் தன் குழந்தையை விற்க யாஸ்மின் திட்டமிட்டுள்ளார்.

இதனையடுத்து ஜெயகீதா சொன்ன படி கைக்குழந்தையுடன் புரசைவாக்கம் பகுதிக்கு யாஸ்மின் வந்ததாக கூறப்படுகிறது. அங்கு ஜெயகீதாவின் நண்பரான செண்பகம் என்பவர் அழைத்து வந்த இரு நபர்கள் வெற்று முத்திரை தாளில் யாஸ்மினிடம் கையொப்பம் வாங்கிவிட்டு கவரில் ஒரு தொகையை அளித்துவிட்டு குழந்தையை பெற்று சென்றதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து ஆட்டோவில் சென்ற யாஸ்மின் ஆட்டு தொட்டி அருகே சென்ற போது மர்ம நபர்கள் சிலர் முகவரி கேட்பது போல் நடித்து பணப்பையை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து யாஸ்மின் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போலீசார் குழந்தையை பணம் கொடுத்து பெற்று சென்ற நபர்களே பணத்தை பறித்து சென்றது உறுதியானது.

இதனையடுத்து சட்டவிரோதமாக குழந்தையை விற்ற  யாஸ்மின் இடம் விசாரணை நடத்தி வரும் போலீசார் இடைத்தரகர்களான ஜெயகீதா மற்றும் செண்பகத்தை கைது செய்ததோடு மற்றவர்களை தேடி வருகின்றனர்.