​​ சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

Jun 20, 2018 8:56 PM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆனித் திருமஞ்சன திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது.image

நடராஜர், சிவகாம சுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் சுவாமிகள் தனித்தனித் தேர்களில் அலங்கரித்து வைக்கப்பட்டு 4 மாட வீதிகளை தேர்கள் வலம் வந்தன. அப்போது சிவன், பார்வதி, காளி வேடமிட்ட பலரும் மேள, தாளத்திற்கு ஏற்றவாறு ஆடினர்.நாளை காலை முதல் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு பிற்பகலில் ஆனித் திருமஞ்சன தரிசனம் நடைபெறுகிறது.