​​ மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிவேக எஸ்-கிளாஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிவேக எஸ்-கிளாஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிவேக எஸ்-கிளாஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம்

Jun 20, 2018 2:08 AM

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிவேக எஸ்-கிளாஸ் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை 2 கோடியே 55 லட்ச ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மெர்சிடிஸ் AMG S 63 கூப் ((Mercedes Benz S-63 AMG Coupe)) என அழைக்கப்படும் புதிய மாடல், இதே விலைக்கு கிடைக்கும் மாடல்களுடன் ஒப்பிடும் போது புதிய பென்ஸ் மாடலில் 4.0 லிட்டர் ட்வின் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி8 பெட்ரோல் இன்ஜின்((4.0 litre, twin turbocharged V8 petrol engine)) வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் முந்தைய இன்ஜின்களை விட 35 பிஹெச்பி வரை கூடுதல் திறன் கொண்டிருக்கிறது.

4-வீல் டிரைவ் மற்றும் 9 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருப்பதால், வழக்கமான பென்ஸ் AMG கார்களை விட அதிவேகமாக செல்லும் திறன் பெற்றிருக்கிறது. சூப்பர்கார் போன்ற, அதிவேக பென்ஸ் எஸ்.கிளாஸ் 63 மாடல் கார், மணிக்கு சுமார் 300 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.