​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாம்பன் பாலம் அருகே புயல் காற்று வீசி வருவதன் காரணமாக, நடுவழியில் நிறுத்தப்பட்ட விரைவு ரயில்

Published : Jun 19, 2018 1:01 AM

பாம்பன் பாலம் அருகே புயல் காற்று வீசி வருவதன் காரணமாக, நடுவழியில் நிறுத்தப்பட்ட விரைவு ரயில்

Jun 19, 2018 1:01 AM

ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் பல மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

பாம்பன் பாலம் பகுதியில் வீசி வரும் புயல் காற்று காரணமாக அக்காள்மடம் அருகே இந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. 3 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் நடுவழியில் நின்றுகொண்டிருக்கும் நிலையில், உணவு, தண்ணீர், குழந்தைகளுக்கான பால் உள்ளிட்டவை கிடைக்காமல் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். தங்களை ராமேஸ்வரம் ரயில் நிலையத்துக்காவது திருப்பி அழைத்துச் செல்லும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர். நடுவழியில் ரயில் நிறுத்தப்பட்டதால், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை பயணிகள் ரயில், சென்னை விரைவு, கன்னியாகுமரி விரைவு உள்ளிட்ட ரயில்கள் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளன.