​​ வோடபோன் - ஐடியா இணைப்பு திங்களன்று நடைபெறும் என மத்திய தொலைதொடர்பு துறை அதிகாரிகள் தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வோடபோன் - ஐடியா இணைப்பு திங்களன்று நடைபெறும் என மத்திய தொலைதொடர்பு துறை அதிகாரிகள் தகவல்

வோடபோன் - ஐடியா இணைப்பு திங்களன்று நடைபெறும் என மத்திய தொலைதொடர்பு துறை அதிகாரிகள் தகவல்

Jun 18, 2018 2:03 AM

வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைப்புக்கு தொலைதொடர்பு அமைச்சகம் திங்களன்று ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் ஒன்றே கால் லட்சம் கோடி ரூபாய் கடனில் தத்தளிக்கும் இரு நிறுவனங்களும் இணையும் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை எட்டின. இரு நிறுவனங்களும் இணைந்து வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற பெயரில் மிகப்பெரிய செல்போன் நெட்வொர்க் சேவை நிறுவனமாக செயல்படவுள்ளன.

இதற்கான சான்றிதழை, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் திங்களன்று வழங்கவுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்காக இரண்டாயிரத்து 100 கோடி ரூபாய்க்கான வங்கி உத்தரவாதத்தை இந்த நிறுவனங்களிடம் தொலைதொடர்புத் துறை கோரியுள்ளது.