​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விராட் கோலியின் திடீர் விலகல் அறிவிப்பு.!

Published : Sep 16, 2021 6:11 PM

விராட் கோலியின் திடீர் விலகல் அறிவிப்பு.!

Sep 16, 2021 6:11 PM

 

உலக கோப்பை டி20 தொடருக்கு பிறகு டி20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலக உள்ளதாக, விராட் கோலி அறிவித்துள்ளார். ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் கவனம் செலுத்தும் வகையில் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகும் முடிவை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

பொறுப்பில் இருந்து விலகும் முடிவை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, மற்றும் தலைவர் கங்குலியிடம் தெரிவித்துள்ளதாகவும் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இந்திய டி20 அணியில் பேட்ஸ்மேனாக தொடர்ந்து திறம்பட செயல்படுவேன் எனவும்  விராட் கோலி தெரிவித்துள்ளார்.